கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவர் குறிச்சி பகுதியில் தனது பரப்புரையை மேற்கொண்டார். ஈச்சனாரி, கணேசபுரம், சீனிவாச நகர், அண்ணாபுரம், மேட்டூர், பஜ்சாயத்து ஆபிஸ் வீதி, சக்தி நகர், குருசாமி பிள்ளை வீதி, காந்திஜி ரோடு, முத்தையாநகர், செங்கோட்டையா காலனி, சிலோன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், பாரத் நகர், சிவசக்தி காலனி, வ.உ.சி நகர், எல்.ஐ.சி காலனி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் தனது தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
வழி நெடுக வானவேடிக்கை மற்றும் பட்டாசு சத்தத்தில் குறிச்சி பிரபாகரன் வலம் வந்தார். பெண்கள் மலர்கள் தூவி, ஆரத்தி எடுத்தனர். 98வது டிவிசனில் தி.மு.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அவருக்கு சால்வை அணிவித்தனர். குறிச்சி தெற்கு பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் நிசார் குறிச்சி பிரபாகரனுக்கு ஆளுயர மாலை அணிவித்து மலர் கீரிடம் சூட்டினார். மேலும் மலர் செங்கோள் வழங்கினார். தொண்டர்கள் குறிச்சி பிரபாகரன் வாழ்க என கோஷங்கள் முழங்கினர். குறிச்சி பிரபாகரனை காண கூடியிருந்த கூட்டத்தினை பார்த்து ”உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற செய்யுங்கள்” என அவர் கேட்டு கொண்டார்.

தேர்தல் அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனத்தை நோக்கி சென்றவரை வழிமறித்த மூதாட்டி ”நீ இந்த ஊருக்கு சொந்தக்காரன், கண்டிப்பா ஜெயிப்பே” என வாழ்த்தினார். அவரிடம் ஆசி பெற்றவர் தனது பரப்புரையை தொடர்ந்தார்.
Be First to Comment