தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழக பா.ஜ.க., தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில், வரும் திங்கட்கிழமை முதல், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறிச்சி மண்டல் 98வது வார்டு 104வது கிளையில் மண்டல் தலைவர் மதிவாணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.கிளைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட ஓபிசி செயற்குழு உறுப்பினர் சண்முகம், மண்டல் ஊரக நகர்ப்புற வளர்ச்சித் தலைவர் கணேஷ், மண்டல் ஓபிசி அணி சக்திவேல், மண்டல் மகளிர் அணி துணைத் தலைவர் சூர்யா, பொருளாளர் பேபி, இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தி.மு.க. அரசுக்கு எதிராக தமிழக பா.ஜ.க. நடத்தும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சி பா.ஜ.கவினர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment