கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் குறிச்சி பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து குறிச்சி பகுதியில் தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

குறிச்சி பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து குறிச்சி, காந்திநகர், சுந்தராபுரம் மற்றும் போத்தனூர் பகுதிகளில் தி.மு.க தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். வேட்பாளர் வீட்டின் முன் மாவட்ட பிரதிநிதி நிசார் அகமது, டிவிசன் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்திருந்து நாளை சென்னையிலிருந்து குறிச்சி பிரபகாரன் வருவதையொட்டி வரவேற்பு கொடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
Be First to Comment