குறிச்சி பிள்ளையார்புரத்தில் உள்ள நாகராஜபுரத்தில் தீ பரவியது. குறிச்சி பிள்ளையார்புரம், நாகராஜபுரத்தில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு மரங்கள் மற்றும் செடி. புதர் மட்டி கிடக்கிறது. இன்று காலை இந்த பகுதியில் திடீரென தீ பரவியது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வனத்துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறை காவலர்கள் சிலர் அங்கிருந்த செடிகளை பிடிங்கி பரவும் தீயை கட்டுக்கொள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த பகுதிக்கு தீயணைப்பு துறை வந்து தீயை அனைக்க முடியாத வகையில் பாதை உள்ளது. சுமார் 2.5 ஏக்கருக்கு மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டு வைத்துள்ளனர். இந்த தீ விபத்தால் 7,000 மரக்கன்றுகள் நாசமானது. இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இந்த வனத்திற்குள் செல்லாத வகையில் தடுப்புகளோ, காவல்களோ இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். மரக்கன்றுகள் கருகியதை அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போதிய பாதுகாப்பு கொடுத்தால் தேவையற்ற செயல்களும், தீ பரவுவது தடுக்கப்படும் என்கின்றனர் அப்பகுதியினர்.
Be First to Comment