மத்திய பா.ஜ.க. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட மத்திய பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிப்பதாக தமிழகம் முழுவதும் தி.மு.க.கூட்டணி கட்சிகள் சார்பாக கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் படி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பு நிசார் அகமது மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்று ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தினார்கள்.
அதேபோல கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சுகுணாபுரம் பகுதி பொறுப்பாளர் மு.ராஜேந்திரன் தலைமையில் அவரது இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முகம்மது அலி,குமாரசகாயராஜ்,சிறுத்தை அப்பு,வி.சுப்பரமணியம்,ஆனந்தன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆலோசனைபடி குறிச்சி தெற்கு பகுதி 100அவது வட்டக்கழகத்தில் பா.ஜ.க அரசை கண்டித்து 100-அ,வது வட்டக்கழக பொன்.சுரேஸ்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
95 வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்
குறிச்சி ஆர். ரமணி மற்றும்
குறிச்சி பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர்
கு.பிரபாவதி தலைமையில்
குறிச்சி சில்வர் ஜூப்ளி விதி பொதுக்கழிப்பிடம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து கருப்பு கொடியை கையில் பிடித்து மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Be First to Comment