“உத்தேச வேட்பாளர் பட்டியலுக்காக காத்திருக்கிறேன்… முக்கால் மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று தகவல் அனுப்பினார் குறிச்சியார். சொன்னபடியே ஆஜரானவர்,
”வேட்பாளர் லிஸ்ட் ரெடியாகி விட்டதா?”
“குறிச்சி தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு தரப்பிலும் கூட்டணிக்கு ஒரு வார்டை கூட ஒதுக்கீடு செய்வதற்கு தயாராக இல்லையாம். ஆனாலும் தங்களுக்குள் யாருக்கு சீட் கிடைக்கும் என்கிற பதைபதைப்பில் இருப்பது தி.மு.கவினர்தானாம்.
ஏற்கெனவே தயாராகிவிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் பற்றி நாம் விசாரித்தோம். அதில் ஒரு சிலரை தவிர பெரும்பாலும் சென்ற முறை வெற்றி பெற்றவர்களுக்கே சீட் கொடுத்திட முடிவாம்.
அதன்படி 85வது வார்டுக்கு கற்பகம், 94வது வார்டுக்கு பாலகிருஷ்ணன், 95வது வார்டுக்கு ஹிழர், 96வது வார்டுக்கு செந்தில்குமார், 98வது வார்டுக்கு நிஜாம், 99வது வார்டுக்கு ரபீக், 100வது வார்டுக்கு வேணுகோபால் என லிஸ்ட் தயார் நிலையில் இருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 97வது வார்டுக்கு மட்டும் கடும் போட்டி நிலவுகிறதாம்.
“தி.மு.கவின் லிஸ்ட் இருக்கிறதா?”
”தி.மு.க சார்பில் ஒவ்வொரு வார்டிலும் கடும் போட்டியே நிலவுகிறதாம். ஒரு வார்டுக்கு குறைந்தது 3 பேர் தங்களுக்குதான் சீட் என்பதில் உறுதியாக நிற்கின்றார்களாம். மேலும் சீட் கிடைக்காத நிலையில் சிலர் சுயேட்சையாக நிற்கும் மனநிலையில் உள்ளனராம். நாளை இரவுக்குள் அனைத்துவிதமான யூகங்களுக்கு விடை கிடைக்கும்” என விடை பெற்றார் குறிச்சியார்
Be First to Comment