சிட்டி Guys தயாரிப்பில் கோவையை சேர்ந்த மு.பழனிசாமி இயக்கிய, முரண் எனும் குறும்படத்தை பழங்குடியினர் நலன் காக்கும் சமூக செயல்பாட்டாளர் அன்புராஜ் கோவையில் வெளியிட்டார்.

சிட்டி Guys தயாரிப்பில் கோவையை சேர்ந்த பழனிசாமி இயக்கியுள்ள குறும்படம் முரண்.30 நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தின் வெளியீட்டு விழா கோவை மை பிளிக்ஸ் பிரிவியூ தியேட்டர் அரங்கில் நடைபெற்றது. இதில், பழங்குடியினர் நலன் காக்கும் சமூக செயல்பாட்டாளர் அன்புராஜ் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டு பேசினார் ..முழுவதும் கோவையை சேர்ந்த தொழில் நுட்ப இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் பணியாற்றி உள்ள இந்த குறும்படம் குறித்து, சமூக செயல்பாட்டாளர் அன்புராஜ் கூறுகையில்,சூழ்நிலை காரணமாக சிறை சென்று திரும்பும் சிறைவாசிகளின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை காணும் படமாக இது உள்ளதாகவும், அதே சமயத்தில் திட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு சுதந்திரமாக இருப்பவர்கள் என இரு வேறு முரண்பட்ட சமுதாயங்கள் குறித்து இதில் கூறப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் நடித்துள்ள நடிகர்கள் புவன்,விஜய்,சுரேஷ்,தர்மா,அண்ணாமலை, சிவபெருமாள், சுமன், சதீஷ்குமார், பரிமளா மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மதன்வேல், அழகேந்திரன், உதவி ஒளிப்பதிவாளர்கள் புஷ்பராஜ், மணி, இசையமைப்பாளர் மார்க், கலை இயக்குனர் சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment