கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் குறிச்சி பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று சென்னையில் இருந்து கோவை வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷம் முழங்க அவரை வரவேற்றனர்.
போத்தனூர் கடைவீதியிலிருந்து காந்திநகர் வரை வழிநெடுகிலும் தி.மு.கவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிந்தனர். போத்தனூர் கடைவீதியில் 300க்கும் மேற்பட்டோர் அவருக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து அவரை வரவேற்றனர். போத்தனூர் அரசன் தியேட்டர் அருகே பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
போத்தனூரில் வரவேற்பு
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸார் அவருக்கு மாலை அணிவித்தனர். சுந்தராபுரம் சங்கம் வீதியில் 500க்கும் மேற்பட்டோர் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். குறிச்சி பிரபாகரனுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தை கடந்து அவருக்கு சால்வை அணிவித்த வண்ணம் இருந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். மலர்கள் தூவி மண்ணின் மைந்தன் வாழ்க என முழக்கமிட்டனர். பொதுமக்களிடையே வாழ்த்துகளை பெற்ற பிரபாகரன் போத்தனூரில் இருந்து காந்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதற்கு சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் ஆனது. குறிச்சி எங்கும் தி.மு.கவினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
சுந்தராபுரத்தில் வரவேற்பு
குறிச்சியில் பிரபாகரனை வரவேற்க கூடிய கூட்டத்தால் குறிச்சி குலுங்கியது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தொகுதிக்குள் வரும் போதே குறிச்சி பிரபாகரன் மாஸ் காட்டியுள்ளார். கூட்டத்திற்கிடையே நடந்து வந்த குறிச்சி பிரபாகரனுக்கு, ”ஜெய் ஜெய் பிரபாகரன், ஜெயிச்சாச்சு பிரபாகரன் என்ற தி.மு.கவினர் முழுக்கமிட, பொதுமக்களுக்கு கை கொடுத்து அவரது வாழ்த்துகளையும் பெற்றார். இதன் மூலம் கிணத்துக்கடவு தொகுதியில் தேர்தல் தற்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
Be First to Comment