கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் 1988-92 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் முடித்த மாணவர்கள் தற்போது தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நினுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வாட்சப் செயலி மூலம் ஒண்றிணைந்த இந்த முன்னால் மாணவர்கள் இதே ஆண்டு பயின்றவரும் தற்போதைய தமிழ்நாடு காவல் துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல் துறை தலைவரும் ஆன டாக்டர் தினகரன் தலைமையில்,கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
சென்னை பெரு வெள்ளத்தின் போது, மாதவரம் அருகில் உள்ள சடையன் குப்பத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது,கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாலக்காடு அருகில் உள்ள 11 குடும்பத்தினர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது என்பதை குறிப்பிட்டு சொல்லலாம்.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றால் தந்தையரை இழந்த குடும்பத்தை சேர்ந்த 5 பெண் குழந்தைகளுக்கு கல்வி செலவிற்காக தலா ஒரு இலட்சம் என ஐந்து இலட்சம் வைப்பு தொகைக்கான வைப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 1988- 92 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பாக நடைபெற்ற இதில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியம் மெரினா ரோஸ், சந்திரசேகர், சுசி சுமதி,மற்றும் 1988-92 ஆம் ஆண்டு முன்னால் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் குழந்தைகளுக்கு நலத்திட்ட வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல் துறை தலைவர் டாக்டர் தினகரன் கலந்து கொண்டார். இதில் ,தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பத்தூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment