கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மழலையர் பள்ளிகளில் குழந்தைகள், வேடம் அணிந்து வர வேண்டும் என்ற ஆடியோ வெளியாகி உள்ளதை தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என ஆசிரியர் பெற்றோர்களிடம் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ, இன்று காலை முதல் பகிரப்பட்டு வருகிறது.
ஆடியோ வெளியானதை தொடர்ந்து இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய அவர் அனைத்து மதத்தினரும் படிக்கும் பள்ளிகளில் மதச்சார்பின்மையை போதிக்கும் அவ்வாறான இடங்களில் இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்து நடத்தும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்றும், மேலும் பெற்றோர்களுக்கு பொருளாதார பாரத்தையும் தரக்கூடாது என தெரிவித்தார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புகிறோம் என கூறியதாகவும் தெரிவித்தார்.
Be First to Comment