குறிச்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் பேரில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, குறிச்சி பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை விரைவுப்படுத்திடவும், அதிக அளவிலான வாகனங்களை இதற்கு பயன்படுத்த வேண்டுமென குறிச்சி பிரபாகரன் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே கிருமி நாசினி தெளிக்கும் பணியில் வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 5 கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
இந்த வாகனங்கள் மூலம் பிரதான சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதே போன்று ஆட்டோ ஸ்பிரேயர் இயந்திரம், பேட்டரி ஸ்பிரேயர் மூலமாக வார்டு வாரியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களை குறிச்சி பிரபாகரன் கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் கொரோனா பரவலை தடுத்திட அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளித்திட கேட்டுக் கொண்டார். இதில் மண்டல சுகாதார அலுவலவர் லோகநாதன், சுகாதார ஆய்வாளார்கள் ஜீவன் முருகராஜ், ஜெரால்டு, மேற்பார்வையாளர்கள் காளியப்பன்,ஜெயசீலன் உடன் இருந்தனர். தி.மு.கவின் பகுதி செயலாளர்கள் காதர், கார்த்திகேயன், டிவிசன் செயலாளர்கள் மகாலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, வானவில் கனகராஜ், புவனேஷ், மனோகரன், ஆட்டோ ராஜூ, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூடுதல் கிருமி நாசினி வாகனங்கள்: குறிச்சி பிரபாகரன் துவக்கி வைத்தார்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment