கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கான ரோட்டரி சங்க விருது, கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.கோவை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் பிரபு, செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் விருது வழங்கினர்.

விருது பெற்றுக்கொண்டகோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி பேசியதாவது, ரோட்டரி சங்கம் வழங்கிய இந்த விருது,கோவை சரகத்துக்கு கிடைத்த அங்கீகாரம். நான்கு எஸ்.பி.,க்கள், ஆயிரக்கணக்கான போலீசாரின் பணிக்கு கிடைத்த பாராட்டாக இதை கருதுகிறேன்.

கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணியை காட்டிலும், ‘போக்சோ’ வழக்குகளில் கோவை சரக போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை சரகத்தில் தான், 75 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.அதுவும், 20 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கிய 50 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதில், கோவை சரகம் தமிழகத்தில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு டி.ஐ.ஜி., பேசினார்.
Be First to Comment