Press "Enter" to skip to content

கேரளாவில் இருந்து கோவைக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்

கேரளாவில் இருந்து கோவைக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயம். வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள கேரளா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கேரள எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழைபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இ-பாஸ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லா விட்டால், கட்டாயம் கோவைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், கேரளாவில் இருந்து தினமும் கோவைக்கு பணிக்காக வந்து செல்பவர்கள், பல்வேறு அலுவல் ரீதியாக, வணிக ரீதியாக வந்து செல்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சியில் 2 இடங்கள், ஆனைமலை, ஆனை கட்டி, வால்பாறை உள்ளிட்ட கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாமல் கேரளாவில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks