கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் கே.எம்.சி.எச். மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன.
11 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தில், முறையான அறுவை சிகிச்சை நிபுணத்துவம், உயர் அடர் கீமோதெரபி சிகிச்சை, உயர்வகை கதிர்வீச்சியல் சிகிச்சை போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் இங்கு வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
தற்போது புற்றுநோயால் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதால்,கே.எம்.சி.எச். மருத்துவமனையில், குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை பிரிவை கே.எம்.சி.எச். மருத்துவ கல்லுாரி பொது மருத்துவமனையில் துவக்கியுள்ளது.

இதற்கான துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி தேவி பழனிசாமி, கே.எம்.சி.ஹெச். செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை காவல் துறை துணை தலைவர் முத்துசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை பிரிவை துவக்கி வைத்தார்.
இதில் சி.எம்.சி.எச். பேராசிரியர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவத்தின் தலைவர் டாக்டர் வி. பூமா, கலந்து கொண்டார். விழாவில் கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி பேசுகையில், ”புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக திகழும் செப்டம்பர் மாதத்தில், குழந்தைகளுக்கான இலவச புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. புற்றுநோயிலிருந்து மீளும் நிலையில் உள்ள தேவையான குழந்தைகளுக்கு இது உதவியாக இருக்கும். கே.எம்.சி.ஹெச் ன், பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்,” என்றார்.
Be First to Comment