கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள், ஆதரவு சிகிச்சையாகவே பார்க்கப்படுகிறது.
பல நாட்கள் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வந்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர்களை போல நம்பிக்கையும், தைரியமும் இல்லாமல் , இல்லாதததை இருப்பதாக நினைத்து, மனதை வருத்திக்கொண்டு சிகிச்சை பலனளிக்காமல் இறப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை முனைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியர் விஜயலட்சுமி இருவரும் கொடிசியா வளாகத்தில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவசமாக, மனநல பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இதில் மூச்சுப்பயிற்சி , உடல் மற்றும் மன நல பயிற்சிகள் அடங்கும். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தை நீக்கி , அவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தி நோயிலிருந்து குணமடைய உதவுகிறார்கள்.
Be First to Comment