கோவை அருகே கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளான செய்தியாளர் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். கோவை சூலூர் பகுதியில் தினத்தந்தி குழுமம், மாலை நாளிதழ், மாலை மலரில் பகுதிநேர செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் மணிகண்டன் வயது 47, திருமணம் ஆகாதவர்.
இவருக்கு சந்தோஷ் என்ற ஒரு தம்பி உள்ளார். இவருடைய தகப்பனார் நகைச்சுவை நடிகராக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அண்ணன் தம்பி இருவர் மட்டும் வசித்து வந்துள்ளனர்.
அவருடைய தம்பி சந்தோஷ் சூலூரில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் மணிகண்டனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவையில் உள்ள அலுவலகம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் ஆக்ஜிசன் கூடிய பெட்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து மணிகண்டன் உடைய தம்பி சந்தோஷ் அவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். செல் போன் எடுக்கவில்லை. அதனால் இன்று அலுவலகத்தில் தகவல் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சென்று கேட்டபோது நேற்று மாலை 6 மணி அளவில் மணிகண்டன் இறந்துவிட்டதாகவும் அங்குள்ள வார்டில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த செய்தி அந்தப் பகுதியில் உள்ள செய்தியாளர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது. மணிகண்டன் இறந்த செய்தி செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment