கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி சார்பாக, இலவசமாக அடக்கம் செய்வதற்கான திட்டத்தை பொள்ளாச்சி தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்யும் பணியை த.மு.மு.க.வினர் செய்து வருகின்றனர். இதுவரை கோவையில் மட்டும் 350க்கும் மேற்பட்ட நபர்களை நல்லடக்கம் செய்யத்துள்ளனர். தமிழகம் முழுவதும் த.மு.மு.க சார்பில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
கொரோனா தொற்றால் இறந்துவரும் நபர்களை ஜாதி, மதம் பாராமல் அவர்களை இலவசமாக நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்க நிகழ்வு கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நடைபெற்றது.
த.மு.மு.க மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்ற இதில்,பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். த.மு.மு.க மாநில செயலாளர் சாதிக் அலி, த.மு.மு.க மாவட்ட செயலாளர் முஜிபு ரஹ்மான், ம.ம.க மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, த.மு.மு.க மாவட்ட பொருளாளர் அப்பாஸ், ம.ம.க மாவட்ட துணைத் தலைவர் சிராஜ்தீன், த.மு.மு.க மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆஷிக் அஹமது, ரஜாக், ஷாகுல், மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமது பஷீர், நூரூதீன், அக்கீம், மருத்துவ சேவை அணி மாநிலத் துணைச் செயலாளர் ரபீக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சபியுல்லா, ம.ம.க கிழக்கு பகுதி செயலாளர் ரபீக், தி.மு.க பகுதி பொறுப்பாளர் ஜெயிலா, தி.மு.க மாவட்டம் பொறுப்புக் குழு உறுப்பினர் சாதிக், ம.ம.க 86 வார்டு கிளைத் தலைவர் பைசல், தி.மு.க வார்டு பொறுப்பாளர் குதுபுதீன், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் த.மு.மு.க, ம.ம.க பகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கக் கூடிய முஸ்லீம் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவருக்கு பரோல் கொடுக்கக் கோரியும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரத்திடம் சிறைவாசிகள் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யும் த.மு.மு.க மருத்துவ சேவை அணி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment