கோவையில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களின் அவசியம் கருதி கொரோனா பேரிடர் மையத்தை (covid relief centre) கோட்டை மேடு, கரும்புக்கடை, செல்வபுரம், குனியமுத்தூர், குறிச்சி பிரிவு ஆகிய இடங்களில் துவங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக காந்திபுரம் டிவிஷன் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் இணைந்து கொரோனா பேரிடர் உதவி மையத்தை , காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் துவக்கி வைத்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்ஷண், பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M. I. அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர்கள், உபைதுர் ரஹ்மான் , முஜீபூர் ரஹ்மான் மற்றும் SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல தலைவர் A.அன்வர் ஹுசைன் கலந்து கொண்டனர்.
Be First to Comment