பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டம் சார்பாக, பசிப்பிணி போக்குவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி உதவி தொகை என பல்வேறு சமுதாய நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சமுதாய நல திட்டங்களை கோவை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பசிப்பிணி போக்கும் திட்டத்தில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் பழங்கள் வழங்கும் நல்லுணவு திட்டத்தை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்கம் சார்பாக, சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நல்லுணவு திட்டத்தின் நூறாவது நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு,பழங்கள் வழங்கும் விழா மருத்துவமனை முன்பாக நடைபெற்றது.கோவை சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்க தலைவர் கர்ணன் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும் மோகனா ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உணவு, பழங்கள், பிஸ்கட் போன்ற உணவு வகைகளை வழங்கினர்.. இதில் அரசு மருத்துவமனையில் உள்ள தாய்,சேய் நல விடுதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள நோயாளிகள்,பொதுமக்கள்,ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,முன்னாள் தலைவர் கோவிந்தராஜ்,பொருளாளர் வெங்கடாச்சலம்,மாவட்ட இணைச் செயலாளர் மோகன்ராஜ்,ஜி.எம்.டி.ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால்,ஜி.எஸ்.டி.ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் மீனா குமாரி,தேவானந்த்,மனோகரன், ,குபேந்திரன், திலகவதி குபேந்திரன்,,கிரிதரன்,தண்டபாணி,,நிகாத் கர்ணா,ரீத்து கர்ணா,சுசாந்த் நாகராஜ்,போட்டோகாராபர் ஸ்பின் சிட்டி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment