கோவை பத்திரிகையாளர் மன்றம் (CPC) இந்த ஆண்டுடன் 25வது ஆண்டை நிறைவடைவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பத்திரிகையாளர்களின் புகைப்பட கண்காட்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த புகைப்பட கலைஞர்களின் புகைபடங்கள் கண்காட்சியில் வைக்கபட்டன.
இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்,மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்களை மாவட்ட ஆட்சியர் புகைப்படம் எடுத்தார்.
இந்த ஆண்டுடன் 25வது ஆண்டை நிறைவடைவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் தனியார் கல்லூரியில் பத்திரிகையாளர் குடும்ப உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் முத்தூஸ் மருத்துவமனை இயக்குனர் முத்துசரவணவேல், சாவித்திரி போட்டோ ஹவுஸ் இயக்குனர் பரஸ்ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடன்சி டவர் ஓட்டல் அரங்கில் வெள்ளி விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் கோவையின் முக்கிய பல்வேறு துறை சார்ந்த தொழில்துறையினர்,சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களை கவுரபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்,மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழில் துறையினருக்கு அமைச்சர் நினைவு பரிசு வழங்கி கவுரிவித்தார்.
Be First to Comment