ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் 3201 சார்பாக தொழில்சார் சாதனை விருதுகள் வழங்கும் விழா, அவினாசி சாலையில் உள்ள சேம்பர் அரங்கில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சேஷா நாராயணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளர் மனோஜ், தொழில்சார் சேவைகள் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சான்ட்பிட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஏ.வி.வரதராஜன்,வைகிங் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரன்,மற்றும் ரொட்டேரியன் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறந்த தொழில்சார் சிறப்பு விருது சகோதரன் நிறுவனங்களின் தலைவர் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, விருது பெற்ற சுப்ரமணியன் பேசுகையில்,தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ள கோவை,சிறந்த இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நகரமாக இருப்பதாகவும்,பன்முக திறமைகளை கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதால், தொழில் வளர்ச்சி விரிவடைய கூடிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக பெருமையாக தெரிவித்தார்.
Be First to Comment