கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தபால்காரர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபால் தலைமை தாங்கி பேசியதாவது:-
தொழிற்சங்கத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. குறிப்பாக தொழிற்சங்கங்களில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கு அரசு கூறும் நபர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரு பொறுப்பில் ஒரே நபர் 2 முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதனை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Be First to Comment