காஞ்சிபுரத்தில் வட கலை மற்றும் தென் கலை பிரிவினர் நடுவே இன்று மோதல் வெடித்து கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னோற்றுதலின் பொழுது இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அவை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை தென்கலை பிரிவினர் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகம் சுழிக்க வைத்தது. இதனால் அங்கு கூச்சல், குழப்பமும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு பிரிவினர் நடுவே கை கலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் உள்ள ஒருவருக்கொருவர் குறுக்கே புகுந்து சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் உள்ளே வந்து, இரு தரப்பையும் விலக்கி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவிலில் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சினை
More from தமிழகம்More posts in தமிழகம் »
- கல் குவாரி: குத்தகைதாரருக்கு ரூ.10.4 கோடி லட்சம் அபராதம்
- களைகட்டிய அறிவாலயம்… குவிந்த விண்ணப்பங்கள்!
- தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…
- தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீச்சு!
- சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 % ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்…சு வெங்கடேசன் எம்.பி கேள்வி?
Be First to Comment