கோவை விளாங்குறிச்சி கரட்டுமேடு பகுதியில் உள்ள குடோனை சேதப்படுத்தி, பொருட்களை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கோவில்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தம்மை அலைகழிப்பதாக பாதிக்கப்பட்ட சிவலிங்கம் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்…கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கோவை விளாங்குறிச்சி கரட்டுமேடு பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயலும் ராணி செல்லமுத்து மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நில உரிமையாளர்கள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்..இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ராமலிங்கம் என்பவரின் குடோனிற்கு அத்துமீறி நுழைந்த ராணி செல்லமுத்து மற்றும் அவரது கூலிப்படையினர் குடோனில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்து சென்றதோடு குடோனை ஜே.சி.பி.எந்திரம் கொண்டு இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிவலிங்கம் அகில இந்திய இந்து நாடார் மக்கள் பேரவை தலைவர் வி.வி.முருகேச பெருமாள் மற்றும் இளைஞரணி தலைவர் செல்வராஜ்,தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாவட்ட துணை தலைவர் சௌந்தர் ஆகியோர் உதவியுடன்,கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மனுவில்,தமது குடோனில் உள்ள மின் சாதன இணைப்பு பெட்டியை ராணி செல்லமுத்து மற்றும் அவரது அடியாட்கள் சேதப்படுத்தியதோடு, பொருட்களை திருடி சென்றதாகவும், இது குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் தாம் புகாரளிக்க சென்றதாகவும், ஆனால் அதே நேரத்தில் தமது இடத்தில் இருந்த வேலிகளை ஜே.சி.பி.எந்திரம் கொண்டு சேதப்படுத்தியாகவும், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் தமது புகாரை சரி வர விசாரிக்காமல் அலை கழித்ததாகவும்,காவல் துறையினர் முன்பாகவே அடியாட்கள் கம்பி வேலியை தாங்கள் சேதப்படுத்தியதாக தெரிவித்ததை கூறியுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் கோவில்பாளையம் காவல் நிலையத்தினர் தம்மிடம் சரியான பதிலை அளிக்காமலும்,தமது புகாருக்கு பதில் தராமல் இருப்பதாக கூறியுள்ளார்.உரிய விசாரனை நடத்த வேண்டிய கோவில்பாளையம் காவல்துறை ஆய்வாளர் மாவட்ட கண்காணிப்பாளரிடமே செல்லுங்கள் என கூறி தம்மை அலைகழிப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்..
Be First to Comment