Press "Enter" to skip to content

கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41.9 அடியாக உயர்வு

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், கோவை நகரின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர் மட்டம் 41.19 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில் இருந்து சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு தொடர்ந்து காணப்படுவதால் அணைக்கு நீராதாரமாக காணப்படும் அருவிகளில் இருந்தும் நீர் வரத்து காணப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக அணையின் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருப்பதால், முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்தும் தண்ணீர் வரத்து காணப்படுகிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் 41.19 அடியாக உயர்ந்திருக்கிறது.

அணை பாதுகாப்பு காரணங்களை கூறி, சில ஆண்டுகளாகவே, கேரள அரசு, 45 அடிக்கே நீர் இருப்பு வைக்கிறது. மொத்த உயரம், 50 அடி என்பதால், முழு கொள்ளளவு தேக்க, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் பேச, தமிழக அரசின் உயரதிகாரிகளிடம், குடிநீர் வடிகால் வாரியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks