கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானத்தில் செல்ல பயணிகள் அதிகரித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி ,புனே, மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் அதிக அளவு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானங்கள் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த மே .ஜூன் ஆகிய மாதங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டன.

தற்போது கொரோனா குறைந்துள்ளதால் விமானங்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே கடந்த 4ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விமானத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கோவை விமான நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை 311 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன .இதில் 38ஆயிரம் பயணிகள் டெல்லி சென்னை புனே கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Be First to Comment