இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களின் புனித யாத்திரைக்கான தடையை சவூதி அரசு விலக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கோவையிலிருந்து ஹஜ் உம்ரா செல்ல பயண குழுவினர் ஆர்வம்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமாக சவூதி அரேபிய நாட்டில் உள்ள புனித மெக்கா உள்ளது. இங்கு வருடந்தோறும் ஹஜ்,உம்ரா போன்ற பயணம் செய்ய ஆர்வமுடன் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் செல்வர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக புனித யாத்திரைக்கு சவூதி அரசு தடை விதித்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கோவையில் இருந்து ஹஜ்,உம்ரா செல்வதற்கு யாத்திரை குழுவினர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக , கோவை காந்திபுரம் மாடர்ன் டிராவல்ஸ் மீண்டும் உம்ரா மற்றும் ஹஜ் பயணத்திற்கான சேவையை துவக்கியுள்ளனர். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், .மௌலவி அல் ஹாஜ் முகம்மது மன்சூர் காஷ்மி, ,டிராவல்ஸ் இயக்குனர் ஏஜாஸ் அகமது , ஜான்சி குழுமங்களின் தலைவர் ஷமீம் பாஷா, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,சாய்ஸ் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு முதல் உம்ரா யாத்திரை குழுவை துவக்கி வைத்தனர்.
Be First to Comment