கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் சார்பாக, அனைத்து பிரிவினருக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ஏ.வி.பி.மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில்,. தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் உட்பட சுமார் 410 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,அசூர் செஸ் இன்ஸ்ட்டியூட் தலைவர் ஜெயஸ்ரீ,சர்வதேச ஆர்பிட்டர் சதீஷ் மற்றும் ஏ.வி.பி.மெட்ரிக் பள்ளி தலைவர் சுப்ரமணியம், தாளாளார் தமிழ்வாணன்,முதல்வர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..

கொரோனா பரவல் காரணத்தால் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முன்னணி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…துவக்க விழாவில் கோவையை சேர்ந்த பிரபல செஸ் வீரர் ஹர்சத் கவுரவிக்கப்பட்டார்..இரண்டு இலட்சம் ரூபாய் மொத்த பரிசு தொகையாக வழங்கப்பட உள்ள போட்டியில் பெண்களுக்கு தனி பரிசு, பொது பிரிவனருக்கு தனி பரிசு,மற்றும் கோவையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு பரிசு உட்பட கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாகவும். மேலும்,இதில் வெற்றி பெறும் வீரர்கள் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதிகளாக கலந்துகொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…
Be First to Comment