தி.மு.க தலைவர்கள் தொடர்பாக முகநூலில் அபாசமாக வெளியிட்டதாக அ.தி.மு.க பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க சார்பில் காவல்துறை ஆணையாளரிடத்தில் புகார் மனு.
தி.மு.க தலைவர்கள் மற்றும் முதல்வர் தொடர்பாக ஆபாசமாக வார்த்தைகள் புகைப்படங்கள் முகநூலில் வந்துள்ளது. ராஜேஷ் என்பவர் செல்பேசிக்கு வந்த இந்த பதிவுகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆபாசமாக பதிவுகளை வெளியிட்ட, குனியமுத்தூர் அ.தி.மு.க பகுதி கழக பொருளாளர் சுரேஷ்பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குனியமுத்தூர் பகுதி கழக தி.மு.க பொறுப்பாளர் குனியமுத்தூர் லோகு, வழக்கறிஞர் கேஎம்.தண்டபாணி உள்ளிட்ட தி.மு.க-வினர் கோவை மாநகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் கேஎம்.தண்டபாணி பேட்டியின்போது கூறுகையில்;-
”தி.மு.க தலைவர்கள் மீது ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையிலும் முகநூலில் அ.தி.மு.க-வை சேர்ந்த ஒருவர் பதிவு செய்துள்ளார். நாடே போன்றும் தலைவர்களை இழிவுபடுத்தி வரும் இதுபோன்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம்” என கூறினார்.
தகவல் தொழில் நுட்ப அணி சிவகணேஷ், வட்டச் செயலாளர்கள் வெற்றிசெல்வம், சண்முகம், சன் சுரேஷ், குனிசை செந்தில், ராஜேஷ், சூர்யா உள்ளிட்ட தி.மு.க-வினர் பலர் உடனிருந்தனர்.
Be First to Comment