Press "Enter" to skip to content

கோவையில் அமைதி ஊர்வலம் – டாக்டர் கிருஷ்ணசாமி!

கோவையில் வரும் நவம்பர் 17ம்தேதி, கோவையின் அமைதியை நிலைநாட்ட, ஒரு அமைதி ஊர்வலம் நடத்த புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்துள்ளது, இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும், என்று குனியமுத்தூர் பகுதியி்ல் புதிய தமிழகம் கட்சியின் தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.கோவை குனியமுத்தூர் பகுதியி்ல், உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது…இன்று, இரண்டு நிகழ்வுகளுக்காக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும்,அதில் முதலாவதாக, திமுக தனது தேர்தல் அறிக்கையில், மின்சார கட்டணம் கட்டுக்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த நிலையில், ஆட்சி அமைத்து 18 மாதங்கள் கடந்தும் இன்னும் இதனை குறைக்காமல், மேலும் உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள சிறு,குறு நிறுவனங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று, மாதம் ஒரு முறை மின்கட்டணம் அளவீடு செய்யும் முறை அமல்படுத்த வேண்டும்.

தாராளமாக மின்சாரம் 24 மணி நேரமும் தட்டுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும், என்பதை கண்டித்து, நவம்பர் 23ம்தேதி நாளை விருதுநகரிலும், நவம்பர் 3ம்தேதி தென்காசியிலும், நவம்பர் 4ம்தேதி திருநெல்வேலியிலும், நவம்பர் 5ம்தேதி தூத்துக்குடியிலும் ஆர்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இரண்டாவதாக, கடந்த 23ம்தேதி கோவையில் நடைபெற்ற சிலிண்டர் விபத்து குறித்து காவல்துறையினர், என்ஐஏ அதிகாரிகள், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், கோவையில் வெடிகுண்டு மற்றும் இன, மத, கலவரங்களுக்கு கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து கட்ட முயற்சிகளையும், முறியடித்து கோவை மாநகர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும், கோவை மாநகரில் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் பொருட்டு, நவம்பர் 17ம்தேதி, கோவையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத, மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைவரும் கலந்து கொள்ள கூடிய வகையில், ஒரு அமைதி பேரணியை கோவையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks