பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்ட விமானம், கோவை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலத்தீவுக்கு புறப்பட்ட தனியார் விமானம், கோவை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து தீ பிடித்ததற்கான எச்சரிக்கை மணி ஒலித்ததாகவும், இதனால் உடனடியாக விமானி கோவை விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தரையிறக்கியதாக கூறப்படுகிறது.

கோவை விமான நிலையத்திலும் தீயணைப்பு துறையினர் தயாராக இருந்த நிலையில், விமானம் தரையிறங்கியதும் பயணிகள் பத்திரமாக வெளியேறினர். அதனை தொடர்ந்து விமானத்தை சோதனை செய்ததில் தீ ஏதும் பிடிக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது விமானம் மாலத்தீவுக்கு புறபட தயாரானது.
Leave a Reply