கோவையில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி, ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் எஸ்.என். மண்டப அரங்கில் நடைபெற்றது.. ‘கீப் பிட் ஹெல்த் சென்டர் மற்றும் மசில் ஃபிட்னஸ் கேரேஜ் ஆகியோர் இணைந்து நடத்திய இதில், மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், ,பாடி பில்டிங், மென் பிசிக், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிப்ட் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.மேலும் மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பெஞ்ச் பிரஸ் போட்டிகள்,பிரத்யேகமாக நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகளுக்கு பிரபல நடிகர்,தயாரிப்பாளரும் ஆன வள்ளல் சக்ரவர்த்தி பிரதீப் ஜோஸ் மற்றும் ஏசியா திருமதி அழகி பட்டம் வென்ற சோனாலி பிரதீப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர். அப்போது பேசிய வள்ளல் சக்கரவர்த்தி பிரதீப் ஜோஸ்,உடல் ஆரோக்கியத்திற்கு ஃபிட்னஸ் மிக அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களது அம்மா சேவா சேரிட்டபிள் அறக்கட்டளை மூலமாக பல்வேறுஉதவிகளை செய்து வருவதாக தெரிவித்த அவர்,இந்த நிலையில் இந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்குவதில் தாம் மகழ்ச்சி அடைவதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஏசியன் திருமதி அழகி பட்டம் வென்ற சோனாலி பிரதீப் ஆண்களை போலவே பெண்களும் உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியம் என தெரிவித்தார்.பின்னர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு வள்ளல் சக்கரவர்த்தி பிரதீப் ஜோஸ்,மற்றும் சோனாலி பிரதீப் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவித்தனர்.
Be First to Comment