ஆனைமலை கேனல் கிளப் நடத்திய அனைத்திந்திய நாய்கள் கண்காட்சி மற்றும் கோயம்புத்தூர் கேட்டெரி சங்கம் நடத்திய சர்வதேச பூனைகள் கண்காட்சி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாய் கண்காட்சியில் போட்டியிட 250 நாய்கள் கலந்து கொண்டன. இவைகள் 30க்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்தவை. அதுவும் கோவை, தமிழகம் என்று மட்டுமல்லாமல் இந்தியாவின் பல இடங்களில் இருந்து கலந்துகொண்டன..
ஒவ்வொரு நாய் இனத்திற்கான தரநிலைகளை நடுவர் குழு மதிப்பீடு செய்தனர். பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பின்பற்றப்படும் இனங்களின் தரத்தின் அடிப்படையில் நாய்களை மதிப்பிட்டனர்.
இந்த நிகழ்வில் இந்தியா இன நாய்களும் (கொம்பை, சிப்பிப்பாறை, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இனங்களும் (ரோட்வெய்லர், ஜெர்மன் ஷெஃபர்ட், கிரேட் டேன், ஹஸ்கி) பங்குபெற்றது.

இவை ஹைதராபாத், மைசூரு ,சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம் ,திருவனந்தபுரம் மற்றும் கேரளாவின் பல மாவட்டங்களிலிருந்தும் நாக்பூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பங்கேற்று இருந்தன.
10 தர வகையில் இந்த பூனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த பூனை இனங்களுக்கு உரிய தரநிலைகளை மதிப்பீடு செய்த பின்னர் வெற்றி பெற்ற பூனைகளின் பட்டியல் அறிவிக்கப்படும்.
இம்முறை போட்டியில் கலந்துகொள்ள வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டிருந்தது. பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற சுமார் 150 பூனைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான இனங்களுடன் கண்காட்சியில் பங்கேற்றன.
திரு. சுதாகர் கடிகினேனி, திருமதி. ஆனி கரோல் மற்றும் டாக்டர் பிரதீப் ஆகியோர் உள்ளடக்கிய நடுவர் குழு சர்வதேச தரத்தின்படி பூனைகள் கண்காட்சியை மதிப்பீடு செய்தனர். நிகழ்வு குறித்து கோயம்புத்தூர் கேட்டெரி சங்கத்தின் தலைவர் அர்த்தநாரி பிரதாப் கூறுகையில், நம் இந்திய பூனைகளை சர்வதேச அளவிற்கு பராமரிக்கும் விதத்தில் அதனை வளர்ப்பவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இரண்டுக்குமே சமமான வளர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை காண முடிந்தது எனக் கூறினார்.
இந்த இரு கண்காட்சிகளில் போட்டியிடும் நாய்கள் மற்றும் பூனைகளில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு தரச்சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்படும். நிகழ்ச்சிக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகை இருந்தது. மொத்தமாக ஐந்தாயிரம் பார்வையாளர்களின் வருகை இந்த நிகழ்வில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Be First to Comment