கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தியாகு. இவர் இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது, இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயனை அணைத்தனர். இது குறித்து தகவலறிந்த குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அடுத்தடுத்து 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இரண்டு இடங்களில் கார்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பள்ளது. நான்கு கம்பெனி சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல் துறையினர் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment