நாடு முழுவதும் நேற்றைய தினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு சிலரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து சென்றனர்.இதனால் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, கேரளாவில் பந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் இருந்து கேரளா செல்லும் கேரளா பேருந்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக நேற்றைய தினம் குனியமுத்தூர் முதல் செல்வபுரம் செல்லும் சாலையில் 2 பேருந்துகளின் கண்ணாடி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment