மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

73-வது பிறந்தநாள் என்பதால், 73 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து, 73 வகை சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.
இந்த முறை, நாளை 15-ம் தேதி பேரூர் செட்டிபாளையம் பகுதியில் இந்தத் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி, சீர்வரிசைப் பொருள்களை வழங்கவிருக்கிறார்கள்.
இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலவச திருமணத்துக்காக முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 73 ஜோடிகளுக்கு பதிலாக 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. நமது வீட்டில் யாருக்காவது திருமணம் நடத்தினால் உள்ளன்போடு எப்படி திருமணம் நடத்தி வைப்போமோ அதைப்போல இந்த திருமணங்களும் நடத்தி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
Be First to Comment