தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத்துகளையும் இணைத்து,அரசியல் சாராத இஸ்லாமிக் பெடரேஷன் ஆப் தமிழ்நாடு செயல்பட உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கோவையில் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இஸ்லாமிக் பெடரேஷன் ஆப் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசணை கூட்டம் இரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
ஒருங்கிணப்பாளர்கள் வழக்கறிஞர் ரஹ்மத்துல்லா, மருத்துவர் பாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,இமாம் சிராஜுதீன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜியாபுதீன் கலந்து கொண்டார். இதில் ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் இணைக்கும் நோக்கத்தில் இந்த கூட்டமைப்பை உருவாக்கி உள்ளதாகவும்,அரசியல் சராத இந்த கூட்டமைப்பின் வாயிலாக ஏழை,எளியோருக்கு வட்டியில்லா கடன் வழங்கும் விதமாக பைத்துல் மால் எனும் சேவை வங்கி துவங்க உள்ளதாகவும், திருமணம் ஆகாத இஸ்லாமிய பெண்களுக்கு திருமண பந்தம் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஹரியத் சமரச மையம்,போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள இளைஞர்களை நல் வழி படுத்தும் நல்லொழுக்க மையங்கள் போன்றவற்றை இந்த அமைப்பின் வாயிலாக செயல்படுத்த உள்ளதாக” தெரிவித்தார்.

Be First to Comment