கோவை செலக்கரசல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, மோனிஷா. வீராசாமி,ஜெயந்தி தம்பதியரின் மகளான இவர் கதிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார்.
சிறு வயது முதலே நாட்டுப்புற கலைகளில் ஆர்வமுடைய மாணவி மோனிஷா அதே பகுதியில் வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் முறையாக சிலம்பம் பயின்று வருகிறார்.
சிலம்பம் சுற்றுவதில், மாணவி மோனிஷாவின் உலக சாதனை நிகழ்ச்சி வீரத்தமிழன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவியின் ஆசிரியர் கனகராஜ், ஐ.நா வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இதில் மாணவி மோனிஷா ஐஸ் கட்டி மீது தனது கால்களை முட்டி போட்டபடி நின்று தலையில் தீக்கரகம்,கண்களில் கூர்மையான பிளேடுகளுடன்,தனது இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தை தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை படைத்தார்.
தற்காப்பு கலை மற்றும் கிராமிய கலைகளை இணைத்து செய்த இவரது இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
உலக சாதனை படைத்த மாணவிக்கு கனகராஜ்,மற்றும் கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.
மோனிஷாவிற்கு செலக்கரச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கருப்புசாமி,முன்னால் தலைவர் சாமிநாதன் உட்பட அங்கு கூடியிருந்த ஊர் பொதுமக்கள் கைகளை தட்டி ஊக்கமளித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
Be First to Comment