உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனையில் செவிலியர் கேக் வெட்டி, விருப்பு வெருப்பின்றி பணியாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே.12 சர்வதேச செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை கே.ஜி. மருத்துவமனையில் மருத்துவமனை தலைவர் டாக்டர் கே. ஜி. பக்தவத்சலம் தலைமையில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கேக் வெட்டி, செவிலியர்கள் ஒருவருக்கு ஒருவர் கேக்குகளை ஊட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதையடுத்து அனைத்து செவிலியர்களும் சாதி, மத பேதம், விருப்பு வெருப்பின்றி, முழு மனதுடன் பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவமனைகளில் பணியாற்றும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Be First to Comment