Press "Enter" to skip to content

கோவையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அமைச்சர் வருவதை அறிந்த அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கோவை விமான நிலையத்தில் பெருந்திரளாக குவிந்து, பிரம்மாண்டமாக உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.கவினர் கூறுகையில் “கோவை மாவட்டத்தை 5 ஆண்டுகளில் 50 ஆண்டு வளர்ச்சியை ஏற்படுத்தி, கோவை மாவட்டம் முழுவதும், பட்டி, தொட்டி எங்கும், காங்கிரீட் சாலைகள், தார்சாலைகள், 24 மணி நேர குடிநீர் வசதிகள்,தெருக்கள் முழுவதும் எல்.இ.டி விளக்குகள், இளைஞர்களுக்காக உள்விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி மையங்கள், இலவச அம்மா IAS அகாடமி, கோவை மக்களுக்காக கோவை மெரினா என்றழைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி பூங்கா, சென்னையை மிஞ்சும் அளவுக்கு அதிகமான பாலங்கள் உள்ளிட்ட என்னிலடங்கா திட்டங்களை கோவை மக்களுக்கு வழங்கியவர் அமைச்சர்.” “கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் தொடர்ந்து வெற்றி வேட்பாளராகவும், கோவை மாவட்டத்தை அ.தி.மு.கவின் எக்கு கோட்டையாக மாற்ற ஓய்வறியாமல் உழைத்த உள்ளாட்சிதுறை அமைச்சருக்கு மேலதாளங்கள் முழங்க, நடனமாடி, மாலைகள் இட்டும், சால்வைகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிப்பதில் நாங்கள் மகிழ்கிறோம்” என்றனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks