தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்த நிலையில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.
இதனால் கோவை பேரூர் நொய்யல் ஆறு வழியாக புட்டு விக்கி பாலத்தை கடந்து ஆத்துப்பாலம் அருகில் உள்ள காளவாய் தடுப்பனை நிறைந்தது. மேலும் இந்த அணை பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நொய்யல் ஆற்றை தூற்வாரும் திட்டத்தை தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து நீர்வழித்தடங்கள் புனரமைக்கப்பட்டது.
இதனால்,தற்பொழுது காளவாய் தடுப்பணை நிறைந்து வழிந்து ஆத்துப்பாலம் வழியாக வழிந்தோடுகிறது. மேலும் ராஜவாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சிறந்தமுறையில் பராமரிக்க பட்டுள்ளதால் இந்த தடுப்பணையில் இருந்து குறிச்சிகுளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
Be First to Comment