தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கின்போது இன்று, முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையான மளிகைக் கடை, காய்கறி, கடைகள் மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு முகக்கவசம் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது 12மணிக்கு மேல் காய்கறி கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த கடைக்கு அதிகாரிகள் 200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும், கடைகள் அரசு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Be First to Comment