கோவை மாநகர பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் ஒரு சில பகுதிகள் வளமாகவும் பளபளப்பாகவும் மாறியுள்ளது. ஒரு சில பகுதிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
குறிப்பாக மக்கள் அதிகமான வாழக்கூடிய மரக்கடை, கோட்டைமேடு, ஜி.எம் நகர் புதூர், பொன்விழா நகர், வள்ளல் நகர், கரும்புக்கடை, மாநகரின் முக்கிய பகுதிகளாக உள்ளது.
இங்கு தரமான தார் சாலைகள் இல்லை சாக்கடைகள் பராமரிப்பு இல்லை, சுத்தமான குடிநீர் இல்லை, குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை, சுற்றுப்புறச்சூழல்- சுகாதாரம் இல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்கள் மற்றும் தெருநாய்கள் தொல்லை என மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளை எல்லையில்லாமல் இருக்கிறது.
இதனை சரி செய்திட வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Be First to Comment