காலாவதியான குளிர்பானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி குளிர்பானங்களை கீழே ஊற்றி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு.
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், உட்பட இயக்கத்தினர் காலாவதியான குளிர்பானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளிர்பானங்களை கீழே ஊற்றி மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் பெட்டிக்கடை முதல், ஹோட்டல் கடைகள் வரை பல்வேறு கடைகளில், காலாவதியான குளிர்பானங்கள் (10 ரூபாய் குளிர்பானங்கள்) விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை பருகும் குழந்தைகள் பெரிவர்கள் பலருக்கும், உடல் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோவையில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி அவ்வாறான குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது அபராதம் விதித்து, சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.”
Be First to Comment