கோவை போத்தனூர் சித்தனபுரம் பகுதியில் இந்து முன்னணி பொருப்பாளரை ஆபாசமாக பேசியதாகவும், அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை சுந்தராபுரம் பகுதியில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலைமறியல் போராட்டம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Be First to Comment