கோவை சிவானந்தா காலனி பகுதியில்
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் எளிய முறையில் கோவையில் உள்ள கேரள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும், இந்த 10 நாட்களும் தினமும் பூக்கோலங்கள் போட்டு, வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், பொது இடங்களில் கூடவோ, ஓணம் தினத்தன்று கோவில்களில் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி பூக்கள் கோலம், நடனம், விருந்து என கொண்டாடும் ஓணம் பண்டிகை இப்போது அவரவர் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள் மட்டும் ஓணம் உடை அணிந்து பூக்கோலங்களை சுற்றி நடனமாடி கொண்டாடினர்.
மேலும் இம்முறை உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் ஓணம் வாழ்த்து சொல்வது, மற்றும் வீடியோ கால் அழைப்பு மூலம் பூக்கோலங்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Be First to Comment