Press "Enter" to skip to content

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, “வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை” எனும் தலைப்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…!

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது…இந்நிலையில், கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக, இளம்தலைமுறை மாணவ,மாணவிகளிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தேசிய மாணவர் படை துறை, செஞ்சிலுவை – இளைஞர் பிரிவு, ரெட் ரிப்பன் கிளப், ரோட்ராக்ட் கிளப் மற்றும் கோவை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்கள் செயலாளர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி தலைமை தாங்கினார்.. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலை வகித்தார்..

மருத்துவர்கள், தேவ்தாஸ் மாதவன், கணேசன், ராமநாதன், யுவராஜ், பாரி விஜயராகவன், அருள்ராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்..பொதுவாக பெரும்பாலானோருக்கு கண்தானம் பற்றி தெரிந்திருக்கும் அளவுக்கு, உடலின் மற்ற உறுப்புகளையும் தானம் செய்யலாம் என்ற விவரம் தெரியவில்லை.ஒருவர் இறந்தபிறகு தானம் செய்வது மற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும்போதே தானம் செய்வது என இரு வகையான தானம் உள்ளது. மூளைச் சாவு அடைந்வர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாகப் பெறுவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. பெரும்பாலும் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளுக்காக உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து தானம் பெறப்படுகிறது.உடல் உறுப்புகள் தானம் குறித்து மக்களிடையே பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன. அதனால் சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரிவான அளவில் விழிப்புணர்வு அவசியமாகிறது.

உயிருடன் இருக்கும் நபர் தானம் செய்யும் போது அதனால் அவருடையை வாழ்க்கை தரம் பாதிக்கப்படாது” என்று மருத்துவர்கள் தங்களது உரைகளில் விளக்கினார்கள்.குறிப்பாக .இந்தியாவில் . மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது குறிப்பிடதக்கது.. நிகழ்ச்சியைத் தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. உடல் உறுப்பு தானம் செய்வதாக பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்….

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks