கோவை மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் உள்ள மக்கள் கொரானா அச்சத்தால் தங்கள் வீதிமுழுவதும் வேப்பிலை தோரணம்கட்டி, வேப்பிலை கலந்தநீரை கிருமி நாசினியாக பயன்படுத்தி வீதிமுழுவதும் தெளித்துவருகிறார்கள்.
நாடுமுழுவதும் பரவிவரும் கொரானா தொற்றை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. மேலும் அரசு பொதுமக்களிடம் அவசியமில்லாமல் வெளியே செல்லவேண்டாம். அவ்வாறு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசத்தை பயன்படுத்த வேண்டும்.

வெளியே சென்று வீடுதிரும்பியதும் கைகளை நன்றாக சோப்பை பயன்படுத்தி கழுவவேண்டும். என்பது போன்ற பல்வேறு நோய்தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினாலும், மக்கள் தங்களின் நம்பிக்கைகளை இழக்காமல் வீதிகளில் வேப்பிலை தோரணம் கட்டி கொரானாவை விரட்டி வருகிறார்கள். எது, எப்படியோ, இந்த கொடிய நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருந்து செயல்பட்டால் எல்லாம் நலமே.
Be First to Comment