சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக மிலாது விழா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை வின்சென்ட் ரோடு, கிரீன் கார்டனில் நடைபெற்றது… சமூக நீதி கூட்டமைப்பின் மாநில தலைவர் இராம.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், ,லயன்ஸ் . ஏ. அருள்தாஸ் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் பொது செயலாளர்,G.முகமது ரபீக் அனைவரையும் வரவேற்றார்..சிறப்பு விருந்தினர்களாக ஹாஜி. S.M. ஹிதாயத்துல்லா அவர்கள் காங்கிரஸ் மாநில துணை தலைவர் , M.S. ஷதஹத்துல்லாஹ் உமரி அவர்கள் ,T. முகமது கலீமுதீன் , P .ஸ்ரீதர் ராமச்சந்திரன் ,A.ஜக்கரிய்யா,இளவேனில் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதிக்கே முன்மாதிரி தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி உலக தலைவர்களெல்லாம் கூறிய தொகுப்பு மலரை வெளியிட்டு கண்காட்சியையும்,,இலவச மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தனர்.

மருத்துவ முகாமில் 110 பேர் பயனடைந்தனர் ,40 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது…தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள்,கைம் பெண்கள் , மக்களின் குழந்தைகள் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் MBC கூட்டமைப்பு கட்டுமான நல வாரியத்தின் மாநில மகளிரணி தலைவி B.ராதா மணி,R.பாலகிருஷ்ணன் ,ராணி ,பொள்ளாச்சி கிருஷ்ணன், கராத்தே சந்திரன், கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பாக C.M. ஸ்டீபன் ராஜ், சாஜூ ,பிளான்சியா ,அருள் டிசெல்வா ,ஹாஜி. அப்துர் ரஹ்மான் ஜலாலி , இஸ்லாமிய புத்தக நிலைய நிர்வாகிகள் ,கிரீன் கார்டன் நிர்வாகிகள் , தனியார் மின் பணியாளர் சங்க நிர்வாகிகள் ,EB சங்க தலைவர் முஹம்மது ஹனீபா ,பொருளாளர் அபுகண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்..
Be First to Comment