கோவையில் 3 மணி நேரத்தில் தொடர்ந்து 17 கிலோ மீட்டர் கையில் சிலம்பம் சுற்றியபடி ஓடி, சிலம்பம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் 6 வயது சிறுமி.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அறிவரசன் சங்கீதா தம்பதியின் 6 வயது மகள் கவிஸ்ரீ. அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் இந்த சிறுமிக்கு சிலம்பம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால், சிறு வயது முதல் முறைப்படி அருகில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தில் சிலம்பம் கற்று வந்துள்ளார். இந்தநிலையில், சிலம்ப கலையில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிறுமி கவிஸ்ரீ க்கு சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்ட சிறுமி கவிஸ்ரீ அருகில் உள்ள மைதானத்தில், தனது கையில் சிலம்பம் சுற்றி கொண்டே 17 கிலோ மீட்டர்கள் தூரம் ஓடி சாதனை படைத்தார்.

மூன்று மணி நேரத்தில் செய்த சிறுமியின் இந்த சாதனையை இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நடுவர்கள் பிரகாஷ் ராஜ் கண்காணித்தார்.தொடர்ந்து 17 கிலோ மீட்டர் ஓடி சிலம்பம் சுற்றிய சிறுமியின் சாதனையை இந்தியா உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து சிறுமிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்..
Be First to Comment